News Just In

12/14/2024 03:58:00 PM

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் வதிவிடச் செயலமர்வு!



கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் வதிவிடச் செயலமர்வு




கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் வதிவிடச் செயலமர்வின் முதல்நாள் செயலமர்வு திருகோணமலையிலுள்ள தனியார் விடுதியில் இன்று ஆரம்பமானது.

‘காணிகளை மீட்டு வழங்குதல்’ எனும் தொனிப்பொருளில் அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. காணி என்றால் என்ன? காணி தொடர்பான ஆவணங்களின் முக்கியத்துவம், காணியின் இயல்பு, அரச காணிகளுக்கு வழங்கப்படும் ஆவணங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டது. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 20 ஊடகவியலாளர்கள் செயலமர்வில் கலந்துகொண்டுள்ளனர்.

No comments: