அரச கட்டடங்களாக மாறும் வாடகை கட்டடங்கள் - அநுர அரசு அதிரடி நடவடிக்கை
அதிக வாடகை செலுத்தி பல்வேறு கட்டடங்களில் இயங்கும் அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டடங்களுக்குள் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை இயங்கும் அலுவலகத்தின் மாதாந்த வாடகை ஐம்பது இலட்சம் எனவும், இதற்கு மேலதிகமாக வர்த்தக அமைச்சின் மாத வாடகை 65 இலட்சம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 24 பேரும் விலையுயர்ந்த வீடுகளுக்குச் செல்லாமல் மின்சாரக் கட்டணம், தண்ணீர்க் கட்டணம் போன்றவற்றைச் சேமித்துள்ளதாக சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
12/06/2024 12:55:00 PM
அரச கட்டடங்களாக மாறும் வாடகை கட்டடங்கள் - அநுர அரசு அதிரடி நடவடிக்கை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: