அறுகம் குடா குறித்து ஒக்டோபர் 23ம் திகதி வெளியிட்ட பயண எச்சரிக்கையை இலங்கை;கக்கான அமெரிக்க தூதரகம் விலக்கிக்கொண்டுள்ளது.
அமெரிக்க தூதரகம் இதனை தெரிவித்துள்ளதுடன் அமெரிக்க பிரஜைகள் அனைவரும் இலங்கைக்கான பயண எச்சரிக்கையை மீளாய்வு செய்யவேண்டும்,எச்சரிக்கைய கடைப்பிடிக்கவேண்டும்,உங்கள் சுற்றுசூழல் குறித்து தெரிந்து சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைள் குறித்து உள்ளுர் அதிகாரிகளிற்கு தெரிவிக்கவேண்டு;ம் என கேட்டுக்கொண்டுள்ளது.
நிலைமை சரியில்லை என உணர்ந்தால் அங்கிருந்து வெளியேறுங்கள்,எப்போதும் தொடர்பாடல் வசதிகளை பேணுங்கள் உள்ளுர் பத்திரிகைகள் ஊடகங்களை பயன்படுத்துங்கள் எனவும் அமெரிக்க தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது
No comments: