நீர்கொழும்பு முன்னக்கரை களப்பில் மூழ்கிய தந்தை, மகள் சடலமாக மீட்பு
நீர்கொழும்பு முன்னக்கரை களப்பு பகுதியில் படகு விபத்தில் காணாமல் போன இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (24) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 7 பேர் நீரில் மூழ்கிய நிலையில் அவர்களில் 5 பேர் உயிர் தப்பியதுடன் இருவர் காணாமல் போயுள்ளனர்.
இவ்வாறு காணாமல் போனவர்கள் இன்று (25) பிற்பகல் நீர்கொழும்பு முன்னக்கரை சிறிவர்தன்புர குளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
ரணில் பெர்னாண்டோ என்ற 50 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையும் அவரது மூத்த மகளான 20 வயதான நிலுஷா நெத்மி பெர்னாண்டோவும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
11/25/2024 06:54:00 PM
நீர்கொழும்பு முன்னக்கரை களப்பில் மூழ்கிய தந்தை, மகள் சடலமாக மீட்பு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: