சமஸ்டி ஊடாகவே தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும்: டேவிட் நவரட்ணராஜ்

‘சமஸ்டி முறையான தீர்வே எமது தீர்வாகும். அதனூடாகவே தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும்’ என யாழ். தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் டேவிட் நவரட்ணராஜ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட தேர்தல் காரியாலயம் பலாலி வீதி கந்தர்மட பகுதியில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. முதன்மை வேட்பாளர் டேவிட் நவரட்ணராஜ் மற்றும் சக வேட்பாளர்களால் தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.
காரியாலயத்தை திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ். மாவட்ட வேட்பாளர் டேவிட் நவரட்ணராஜ் இரண்டு வருடங்களில் நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றியவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்க என தெரிவித்தார்
No comments: