இலங்கை இளைஞர்களிடையே அதிகரித்த எய்ட்ஸ் தொற்று - வைத்தியர் அதிர்ச்சித் தகவல்
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் கூட்டாளிகளைத் தேடுவது, சரியான பாலியல் கல்வி இல்லாதது போன்ற காரணங்களால் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் பரவும் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் பதிவான எச்.ஐ.வி நோயாளிகளில் 15 சதவீதம் பேர் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என சமூக சுகாதார நிபுணர் டாக்டர் விந்த்யா குமாரிபேலி தெரிவித்திருந்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சமூக சுகாதார நிபுணர் டாக்டர் விந்தியா குமாரிபேலி இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
கடந்த ஆண்டு 694 புதிய எச்.ஐ.வி தொற்று நோயாளிகள் நம் நாட்டில் பதிவாகியுள்ளனர்.
சில மருந்துகளுக்கு அடிமையாதல் போன்ற விடயங்கள் இளைஞர்களிடையே புதிய தொற்றுநோய்களின் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
11/28/2024 09:51:00 AM
இலங்கை இளைஞர்களிடையே அதிகரித்த எய்ட்ஸ் தொற்று - வைத்தியர் அதிர்ச்சித் தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: