நெதன்யாகுவின் இல்லம் மீதான தாக்குதலுக்கு ஆரம்பமான பதிலடி நகர்வு
இஸ்ரேலின் பிரதமர் இலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட திடீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக லெபனானின் தலைநகர் பகுதிகளில் இஸ்ரேல் தொடர் வான்வழித் தாக்குதகளை நடத்த ஆரம்பித்துள்ளது.
குறித்த தாக்குதல் இன்று (17.11.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாலஸ்தீனத்தில் வடக்கு காசாவின் பெய்ட் லாஹியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் 72 பேர் உயிரிழந்துள்ளதாக காசா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக வடக்கு இஸ்ரேலில் செசாரியா (Caesarea) பகுதியில் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்தின் மீது நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 16 ஆம் திகதி நெதன்யாகுவின் வீட்டைக் குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தற்போது 2 ஆவது தாக்குதல் நடந்துள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா குடியிருப்பு கட்டடம் மீது தற்போது தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது
11/18/2024 06:03:00 AM
நெதன்யாகுவின் இல்லம் மீதான தாக்குதலுக்கு ஆரம்பமான பதிலடி நகர்வு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: