
கனடாவில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோவில் ஒன்றில் பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
அத்துடன், அந்த தாக்குதலைக் காட்டும் வீடியோ ஆதாரம் ஒன்று வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் பிராம்டனிலுள்ள இந்துக்கோவில் ஒன்றிற்கு சென்றவர்கள் மீது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
தொண்டு நிறுவனம் ஒன்று அந்த தாக்குதலைக் காட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், கோவிலுக்குச் சென்ற பெண்கள், குழந்தைகள் உட்பட மக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு, கனடா பிரதமர் உட்பட கனேடிய அரசியல்வாதிகள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.
No comments: