துரித கதியில் செயற்படுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்பு
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
சமீபத்திய சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் இடர் நிலைமை தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு புதிய மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் இந்த இயற்கை இடரில் சிக்குண்டு பாதிக்கப்பட்டவர்களை இனங்கண்டு அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் பெற்றுக் கொடுப்பதற்காக உடன் துரித கதியில் விரைந்து செயற்படுமாறு அரச திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் இடர் முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத், உள்ளிட்ட மாவட்ட செயலக மற்றும் ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள், முப்படை அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அனைவரும் இந்த இடராபத்து நிலைமையில் மக்களுக்கு தங்களால் ஆற்றக்கூடிய அனைத்து சேவைகளையும் அரசு அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக செயற்படத் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தனர்.
இந்த இடராபத்து வேளையில் முப்படையினரின் சேவை மிக அளப்பரியது என்றும் அவர்கள் மாவட்டத்தில் திறம்பட தமது உதவிகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்ட மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா மாவட்டம் சார்பாக முப்படையினருக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.

No comments: