News Just In

11/07/2024 01:50:00 PM

திடீர் சோதனை நடவடிக்கையில் சிக்கிய பெண்கள் உட்பட 28 பேர்..!


திடீர் சோதனை நடவடிக்கையில் சிக்கிய பெண்கள் உட்பட 28 பேர்..!



கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இரண்டு பெண்கள் உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜம்பட்டா வீதி, புனித அந்தோனி வீதி, இரத்னம் வீதி ஆகிய பகுதிகளிலேயே விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 12,900 மில்லிகிராம் ஐஸ், 5,900 மில்லிகிராம் ஹெரோயின், 10 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments: