
மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில் ‘பணியிடத்தில் மனநலத்திற்கு முன்னனுரிமை அளிக்கவேண்டிய நேரமிது’ எனும் தொனிப்பொருளில்ஆரம்ப கல்வி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு இன்று நடைபெற்றது.
முறைசாரக் கல்விப் பிரிவு இணைப்பாளர் றீற்றா கலைச்செல்வனின் ஒழுங்குபடுத்தலில் வலயக் கல்வி பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் வளவாளர்களாக களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையின் உளநல வைத்தியர் V.தேவறஞ்சினி, பிரதிக் கல்விப்பணிப்பாளர் S.தட்சனாமூர்த்தி , வழிகாட்டல் ஆலோசனை ஆசிரிய ஆலோசகர் பா.துஸ்யந்தன்,ஆரம்பக்கல்விக்கான வளவாளர் பி.சத்தியரூபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாணவர்களிடையே காணப்படும் உளவளர்ச்சி சிக்கல்கள், உளநலம், மெல்லக்கற்றல், பரிகாரக் கற்பித்தல் செயற்பாடுகள், கற்பித்தலில் துணைச்சாதனப்பயன்பாடும், நுட்பங்களும், வகுப்பறை முகாமைத்துவம் போன்றவிடயங்கள் தொடர்பாக தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.
No comments: