News Just In

10/29/2024 01:39:00 PM

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க மாட்டோம்! - அநுர தரப்பு அதிரடி அறிவிப்பு!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க மாட்டோம்! - அநுர தரப்பு அதிரடி அறிவிப்பு



Advertisement







பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப்போவதில்லை என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் இயக்குநர் சட்டத்தரணி ஜே.எம்.விஜயபண்டார பத்திரிகை ஒன்றிற்கு இதனை தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து எந்த விவகாரமும் இல்லை,

ஆனால் அது சிவில் செயற்பாட்டாளர்களை பத்திரிகையாளர்களை ஏனையவர்களை தடுத்துவைப்பதற்கு பயன்படுத்தப்படுவதே பிரச்சினைக்குரிய விடயம். அது இடம்பெற அனுமதிக்கமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

நம்பகத்தன்மைமிக்க தகவல்களை அடிப்படையாக வைத்தே பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவோம்.

அரசியல் பழிவாங்கலிற்காக அதனை பயன்படுத்தமாட்டோம் என ஜனாதிபதி செயலகத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை தவறாக பயன்படுத்தாவிட்டால் பிரச்சினைகள் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

No comments: