News Just In

10/15/2024 03:36:00 PM

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; விசாரணைகல் எந்த அநீதியும் இடம்பெறாது! - அரசு உறுதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; விசாரணைகல் எந்த அநீதியும் இடம்பெறாது! - அரசு உறுதி




உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளின் போது எந்த அநீதியும் இடம்பெறாது என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் உறுதியளித்துள்ளார்.

இன்று அவர் மேலும் தெரிவித்ததாவது,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

விசாரணைகளின் போது அரசாங்கம் என்ற அடிப்படையில் எந்த அநீதியும் இடம்பெற அனுமதிக்கமாட்டோம். எவரையும் காப்பாற்ற மாட்டோம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமானவர்கள் அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தாக்குதல் குறித்த விசாரணைகள் பூர்த்தியானதும் விசாரணைகள் மற்றும் குற்றவாளிகள் என கண்டுபிடிக்கப்பட்டவர்களிற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிற்கு முழுமையான விபரங்களை வெளியிடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments: