
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால், மட்டக்களப்பு நகரில் இன்று முன்னெடுக்கப்படவிருந்த கவனயீர்ப்புப் போராட்டம்பொலிஸாரால் இடைமறிக்கப்பட்டது.
மாதந்தோறும், சுழற்சி முறையில் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்துவரும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களது உறவுகளின் சங்கத்தினர், இம் மாதத்திற்குரிய போராட்டத்தை முன்னெடுக்க விளைந்தவேளை, பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அமலநாயகி தலைமையில் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில்கவனயீர்ப்புப் போராட்டத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
அவ் இடத்திற்கு வருகை தந்த, மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொலிஸார், தேர்தல் காலத்தைச் சுட்டிக்காட்டி, ஒன்றுகூடுவதற்கு தடை விதித்ததோடு, அங்கிருந்தவர்களை வெளியேறிச் செல்லுமாறும் பணித்தனர்.
பொலிஸாரின் உத்தரவால் ஏமாற்றமடைந்த, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், கவனயீர்ப்புப் போராட்டத்தைக் கைவிட்டு, வெளியேறினர்
No comments: