News Just In

10/23/2024 02:13:00 PM

மட்டக்களப்பு ஆரையம்பதியில் இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம்!


மட்டக்களப்பு ஆரையம்பதியில் இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம்



மட்டக்களப்பு ஆரையம்பதியில் இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது. எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ என்னும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது.

நான்காம் கட்டை சந்தியிலிருந்து ஆரம்பமான ஊர்வலம், ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை வரை சென்று நிறைவு பெற்றது. விழிப்புணர்வு ஊர்வலத்தில் இரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் எழுதப்பட்ட சுலோகங்கள், பதாதைகளை பங்குபற்றியவர்கள் தாங்கிச்சென்றனர்.

தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இரத்தம் தேவைப்பாடு தொடர்பில் ஊர்வலத்தின் போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இயக்குனர் அருட்தந்தை நிக்சன், ஜெகதீஸ்வரன் குருக்கள், மௌலவி ஷாஜஹான் உட்பட பலரும்கலந்துகொண்டனர். விழிப்புணர்வு ஊர்வலத்தின் நிறைவில், இரத்ததான நிகழ்வும் ஒழுங்குபடுத்தப்பட்டது.

No comments: