(அஸ்ஹர் இப்றாஹிம்)
பர்ஹான் முஸ்தபா எழுதிய "மரக்கல மீகாமன்" ரொபர்ட் நொக்ஸின் வரலாற்று புனைகதை நூல் வெளியீடு கடந்த ஞாயிற்றுக் கிழமை மூதூர் பேர்ள் கிரேன்ட் மண்டபத்தில் நடுத்தீவு வலுவூட்டல் மற்றும் நலன்புரி சங்கத்தினால் வெளியீடு செய்யப்பட்டது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலாநிதி றவூப் ஸெய்ன் (PhD), மற்றும் எழுத்தாளரும், ஆய்வாளருமான சிறாஜ் மஸ்ஹூர், அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு பெருந்திரளான வாசகர்ளும் விசேட அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வை அஷ்ஷேஹ் என்.சியாத் (நழீமி) தலமை தாங்கியதோடு, வெளியீட்டு அமைப்பின் தலைவர் எஸ்.எம்.முஜீப் அவர்களோடு நூல் திறனாய்வை ஆய்வாளர் சிராஜ் மஷ்கூர் நிகழ்த்தியதோடு வெளியீட்டுரையை ஜே.எம்.ஐ வெளியீட்டகம் சார்பில் இஹ்ஸான் செய்திருந்தார்.. ஊடகவியலாளர் வி.எம்.ஹசீன் அவர்கள் நிகழ்ச்சித் தொகுப்பை வழங்கியதோடு நூலின் முதல் பிரதியினை நூலாசிரியரின் தாயார் சபியா உம்மா மற்றும் பாரியார் ஹிதாயா பர்ஹான் வழங்கி வைக்க தொழிலதிபர் வைத்தியர் வை.ஜெஸ்மின் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
இந்நிகழ்வில் மூதூர் ஜே.எம்.ஐ.வெளியீட்டகம் சார்பாக சிறந்த நாவலுக்கான விருது ஆஷா பாலின் அவர்களினால் நூலாசிரியரின் புதல்வியார் எப்.ஹரீனா செரீனுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: