News Just In

9/03/2024 11:04:00 AM

சென்றல் கேம்ப் விளையாட்டுக்கழகம் நடாத்திய கிறிக்கட் போட்டியில் சம்பியனானது களுவாஞ்சிகுடி மெக்ஸ் விளையாட்டுக்கழகம்

சென்றல் கேம்ப் விளையாட்டுக் கழகம் 64 அணிகளை உள்ளடக்கி நடாத்திய அணிக்கு 7 பேர் 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மாபெரும் மென்பந்து கிறிக்கெட் சுற்றுப் போட்டியில் களுவாஞ்சிகுடி மெக்ஸ் விளையாட்டுக்கழகம் சம்பியன் கிண்ணத்தினையும் 40,000 ரூபாய் பணப்பரிசினையும் தனதாக்கிக் கொண்டது.


(அஸ்ஹர் இப்றாஹிம்)
மேற்படி சுற்றுப் போட்டியில் களுவாஞ்சிகூடி மெக்ஸ் விளையாட்டுக்கழகம் முதலாவது போட்டியில் டைட்டன்ஸ் விளையாட்டுக்கழகத்தையும், இரண்டாவது போட்டியில் கதிரவன் விளையாட்டுக்கழகத்தையும், மூன்றாவது போட்டியில் செந்தமிழ் விளையாட்டுக்கழகத்தையும், காலிறுதிப் போட்டியில் அக்னிஸ்டார் விளையாட்டுக்கழகத்தையும், அரையிறுதிப் போட்டியில் நியூ எவரெஸ்ட் விளையாட்டுக்கழகத்தையும் , இறுதிப் போட்டியில் ஈஸ்டன் சலன்ஜேர்ஸ் விளையாட்டுக்கழகத்தையும் வெற்றி கொண்டு சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

No comments: