( அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது ,கல்முனை ,மருதமுனை ,பாண்டிருப்பு ஆகிய இடங்களில் உள்ள உள்ளூர் வீடுகளுக்கு அருகில் வளர்ந்து காணப்படும் மரங்களினால் வீதியில் பயணிகளும் , பொதுமக்களும் ,வாகன சாரதிகளும் பலவிதமான அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் .
கடந்த பல வருடங்களாக வீதிகளுக்கு அருகாமையில் உள்ள வீடுகள் அமைந்துள்ள பகுதிகளில் நடப்பட்ட மரங்கள் தற்போது வளர்ந்து அவற்றின் கிளைகளும் இலைகளும் வீதியில் மத்திய பகுதிக்கு வந்து உள்ளன .
இதனால் விஷேடமாக தென்னை மரங்களிலிருந்து திடீரென விழும் தேங்காய் ,காய்ந்த ஓலைகள் , மற்றும் பாளை என்பவற்றால் வீதியில் பயணிப்போர் விபத்துக்குள்ளாகி அதனால் உபாதைக்கும் உள்ளாகி வருகின்றனர் .
அத்துடன் வீதி ஓரங்களில் உள்ள மின் கம்பிகள் மற்றும் தொலைபேசி வயர்களில் மரக்கிளைகள் தொட்டுக்கொண்டு காணப்படுவதாலும் சில வேளைகளில் விழுந்த ஓலைகள் இவற்றில் தொங்கிக்கொண்டு காணப்படுவதனாலும் சேதம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் கேட்டுள்ளனர்
No comments: