(அஸ்ஹர் இப்றாஹிம்)
ஸதகா புளட்டின் நலன்புரி நிறுவனத்தின் அனுசரணையில் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு பாதணிகள், அப்பியாசக் கொப்பிகள் மற்றும் புத்தகப்பைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம்.றிசாத் தலைமையில் கடந்த செவ்வாய் (3( இடம்பெற்ற இந் நிகழ்வில் ஸதகா புளட்டின் நிறுவனத்தின் பணிப்பாளரும், பொறியியலாளருமான எம்.சீ.கமால் நிஸாத் பிரதம அதிதியாக கலந்துகொண்டு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பொதிகளை வழங்கி வைத்த்தார்.
மேலும் இந்நிகழ்வில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர், ஆசிரியர் ஏ.எம்.எம் ஸாஹிர் , பாடசாலையின் பிரதி அதிபர் . எம்.ரீ.ஏ.மனாப், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுச் செயலாளர், உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: