(அஸ்ஹர் இப்றாஹிம்)
அமரர் சிவகுருநாதன் ஞாபகார்த்தமாக நடாத்தப்படும் கரப்பந்தாட்ட தொடரின் போட்டியொன்றில் இளவாலை ஐக்கிய வாலிபர் விளையாட்டுக்கழகமும், புத்தூர் கலைமதி விளையாட்டுக்கழகமும் மோதிக் கொண்டன.
மூன்றுசுற்றுக்களை கொண்ட இப்போட்டியின் முதலாவது சுற்றின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தி வந்த இளவாலை ஐக்கிய வாலிபர் அணி 25:16 என்ற புள்ளியடிப்படையில் வெற்றியை பெற, இரண்டாவது சுற்றில் கலைமதி தனது அபார ஆட்டம் மூலம் கடும் போட்டியின் மத்தியில் 25:22 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.
வெற்றியை தீர்மானிக்கவேண்டி ஆரம்பமாகிய 3வது சுற்று மிகவும் நெருக்கமான புள்ளியிடைவெளியில் ஆரம்பம் முதல் நகர்ந்த போதும் இறுதியில் 25:16 என்ற அடிப்படையில் கலைமதி விளையாட்டுக்கழகத்தை வீழ்த்தி சொந்த மைதானத்தில் வெற்றி கொண்டது ஜக்கிய வாலிபர் விளையாட்டுக்கழகம்.

No comments: