(அஸ்ஹர் இப்றாஹிம்)
வகுப்பறையை அழகு படுத்தும் வேலை திட்டத்தை கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய தரம் 7 மாணவர்களும், வகுப்பாசிரியரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
மாணவர்களால் அலங்கரிக்கப்பட்ட வகுப்பறையினை பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம்.றிசாத் திறந்து வைத்தார்.
வகுப்பு ஆசிரியர் திருமதி:எம்.ஏ.எப். நஸ்ரின் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக வகுப்பறை அலங்கரிக்கப்பட்டது.அத்தோடு பாடசாலை அதிபர்,
பிரதி அதிபர் மற்றும் பகுதி தலைவர்களின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்ட இவ்வழகு படுத்தலில் சுவர் பத்திரிகை, பேசும் படங்கள், சிந்தனை துளிகள், அறிவித்தல் பலகை மற்றும் கற்றல் செயற்பாடுகளோடு இணைந்த பல விதமான ஆக்கங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் பகுதித் தலைவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தன
No comments: