News Just In

9/25/2024 11:23:00 AM

வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள அரசாங்க விவசாய கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பயிற்சி பாசறை

வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள அரசாங்க விவசாய கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பயிற்சி பாசறை


(அஸ்ஹர் இப்றாஹிம்)

விவசாய கல்லூரிகளில் கல்வி பயிலும் தெரிவு செய்யப்பட்ட 50 மாணவர்களுக்கு லுணுவில இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிலையத்தில் தென்னை வளர்ப்பு சம்பந்தமான பயிற்சி பாசறையொன்று அண்மையில் இடம்பெற்றது.

தென்னை மரங்களைத்தாக்கும் வண்டுகளின் தாக்கம், அவற்றிற்கான சிகிச்சை, நல்ல இன மரங்களை தெரிவு செய்தல், தெங்கு நடுகை, ஆய்வு கூட பரிசோதனை, களப் பயணம் என்பன போன்ற பல்துறைகளிலும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிலைய உத்தியோஸ்தர்கள் மாணவர்களுக்கு தேவையான சகல விதமாக வசதிகளையும் செய்திருந்தனர்

No comments: