News Just In

9/16/2024 02:54:00 PM

பொது வேட்பாளரை மகனுடன் சென்று தனியாக சந்தித்த மாவை!





இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும், அவரது மகனான வலி வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கலையமுதனும் பொது வேட்பாளரை சந்தித்து தமது ஆதரவைத் தெரிவித்துள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ் பொது வேட்பாளரின் அலுவலகத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸாவின் பிரச்சார கூட்டத்தில் தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்களான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் பிரசார மேடையில் ஏறி தமது ஆதரவை தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments: