(அஸ்ஹர் இப்றாஹிம்)
கிழக்கு மாகாணத்தில் தையல் துறையில் ஆர்வமிக்க யுவதிகளை மையமாகக் கொண்டு அவர்களின் வருமானத்தையும் பொருளாதார தன்மையையும் அதிகரிக்கும் வகையில் யுவதிகளின் தொழில் வாய்ப்பினையும் சமூக அந்தஸ்தையும் உருவாக்கிக் கொடுக்கும் நோக்குடன் கிழக்கின் சுற்றுலா மையம்( Eastern Tour Hub) ஐ.எச்.எஸ்.தொழில்துறை கெம்பஸ் மூலம் எஸ்.எப்.காமன்ஸ் கம்பனியின் பூரண அனுசரணையுடன் தொழில் முனைவோருக்கானநேர்முகத் தேர்வு அண்மையில் இடம்பெற்றது.
இந் நேர்முக தேர்வில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதுடன் அதில் 100 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான தகுதி மாற்று கடிதம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்ச்சி திட்ட நிகழ்வில்
ஈஸ்டர்ன் டுவர் ஹப் யினுடைய பிரதம நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.சர்ஜூன், ஐ.எச்.எஸ்.கெம்பஸ் பிரதம நிறைவேற்றுப் அதிகாரி ஏ.ஏ.ஏ.அப்ரி, எஸ்.எப்.காமன்ஸ் தவிசாளர் மொகமட் சுக்ரி , ஐ.எச்.எஸ்.கெம்பஸ் நிறைவேற்று அதிகாரி எம்.ஐ.எம்.நவாஸ் ,தொழில் வழிகாட்டல் பிரதான நிறைவேற்று அதிகாரி பாதிமா ரின்ஷா , பதிவாளர் நஸீமா பானு, எஸ்.ஆர்.என்.சவுமியா தயாரிப்பு நிறுவனத்தினுடைய தவிசாளர் எஸ்.சவுமியா உட்பட தையல் தொழில்துறை ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments: