News Just In

8/03/2024 02:27:00 PM

தமிழ் இளைஞர்களை இலக்கு வைக்கும் நாமல்! நாட்டின் முக்கிய பொறுப்புக்களுக்கும் பரிந்துரை!




வடக்கு - கிழக்கு தமிழ் இளைஞர்களை நாடாளுமன்றத்திற்குள் உள்ளீர்ப்பதில் பொதுஜன பெரமுன முனைப்புடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் அவர்கள் நாட்டின் மிக முக்கிய பொறுப்புக்களை வகிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஊடகம் ஒன்றிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எதிர்காலத்தில் வடக்கிலிருந்து தமிழ் இளைஞர் ஒருவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவம் செய்வதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இப்போதும் தமிழ்ச் சமூகத்திலுள்ள இள வயதினருடன் எமது கட்சி நெருங்கிசெயற்பட்டு வருகின்றது. குறிப்பாக வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் இளைஞர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதில் தமது கட்சி முனைப்புடன் உள்ளது.

அவர்கள் எதிர்காலத்தில் நாட்டின் மிக முக்கிய பொறுப்புக்களை வகிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்

No comments: