News Just In

8/15/2024 02:08:00 PM

ஜனனம் அறக்கட்டளை ஊடாக வளப்பற்றாக்குறையுடைய பாடசாலை மாணவர்களுக்கு கிறிக்கட் மற்றும் உதைபந்தாட்ட பயிற்சி முகாம்!



(அஸ்ஹர் இப்றாஹிம்)
"மாணவர் திறமைக்கான களம்"
என்ற மகுட வாசகத்திற்கிணங்க கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி அவர்களின் எண்ணக் கருவில் உருவான "விளையாட்டின் ஊடாக இளையோர்களின் வாழ்வை வளப்படுத்துதல்" என்னும் கிறிக்கட் மற்றும் உதைபந்தாட்ட பயிற்சி பாசறை அண்மையில் கொழும்பு இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது.

ஜனனம் அறைக்கட்டளை ஊடாக குறைந்த வசதியுள்ள தமிழ் பாடசாலைகளின் மாணவர்களது உள மற்றும் உடல் ரீதியான முன்னேற்றத்தையும் நற்பண்புகளையும் வளர்க்கும் நோக்கில் கொழும்பு இந்துக் கல்லூரியில் அதிபர் யோகேஸ்வரன் அவர்களின் தலைமையிலும் ஐ .டி. எம். என் .சி .சர்வதேச கல்வி நிறுவனத்தின் விளையாட்டு உத்தியோகத்தர் அசோக் குமார் அவர்களின் வழி நடத்தலிலும் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் பிரசாந்தன் அவர்களின் ஒருங்கமைப்பிலும் கிரிக்கெட் மற்றும் உதைப்பந்தாட்டப் பயிற்சிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் போது கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் மிகவும் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் சிறப்பாக பயிற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

No comments: