பங்களாதேசத்தில் உள்ள இந்துக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என பங்களாதேசத்தில் பதவியேற்றுள்ள முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு உறுதிமொழி அளித்து உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
அதன்படி நேற்று செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, பங்களாதேசத்தில் விரைவில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்றும் அங்கு வசிக்கும் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு குறித்து இந்தியாவில் உள்ள 140 கோடி மக்கள் கவலை கொண்டு உள்ளனர் எனவும் மோடி தெரிவித்திருந்தார்
மேலும் ஸ்திரமான, அமைதியான மற்றும் வளர்ச்சியடைந்த பங்களாதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவு எப்போதும் தொடரும் என்றும் அங்கு உள்ள இந்துக்களுக்கு மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு அவர் உறுதிமொழி அளித்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்
No comments: