News Just In

8/24/2024 03:58:00 PM

காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச மட்ட யானைப்பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்!

காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச மட்ட யானைப்பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்


(அஸ்ஹர் இப்றாஹிம்)
எதிர்வரும் நாட்களில் காரைதீவு பிரதேசத்தில் காட்டு யானைத்தாக்கத்தினால் பயிர்கள், சொத்துக்கள், உடமைகள் பாதிக்கப்படுவதை குறைத்தல் மற்றும் காயமேற்படல், உயிராபத்துக்கள் நிகழ்தலை தடுத்தல் தொடர்பான முன்னாயத்த செயற்பாடுகளை வெற்றிகரமானதாக முன்னெடுத்துச் செல்லல் தொடர்பில் பிரதேசமட்ட யானைப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுவுடனான கலந்துரையாடல் பிரதேச செயலாளர் திருமதி.ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் வழிகாட்டலில், உதவி பிரதேச செயலாளர் திரு.எஸ்.பார்த்தீபன் அவர்களின் தலைமையில், அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தரின் ஒருங்கிணைப்பில் கடந்த வெள்ளிக்கிழமை காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நடைபெற்ற கலந்துரையாடலில் நிருவாக கிராம உத்தியோகத்தர், காரைதீவு பிரதேச சபை செயலாளர், வளத்தாப்பிட்டி வனஜீவராசிகள் அலுவலக உத்தியோகத்தர், காரைதீவு கமநல சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர், காரைதீவு விவசாய போதனாசிரியர்(மத்திய), நீர்ப்பாசன திணைக்கள கல்முனை பிராந்திய அலுவலக திட்டமிடல் உத்தியோகத்தர், சாய்ந்தமருது கமநல சேவைகள் மத்திய நிலைய உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேசமட்ட யானைப் பாதுகாப்பு தன்னார்வ குழு அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments: