பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணயசபையில்இன்றுநிறைவேற்றப்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.
எதிர்த்தரப்பினரின் பலதரப்பட்ட விமர்சனங்கள், சூழ்ச்சிகள் என்பவற்றைக் கடந்து எமது தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலையான சம்பளத்தை உறுதி செய்து கொடுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் கௌரவ அமைச்சருமாகிய ஜீவன் தொண்டமான் அவர்களுக்கும், அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் எமது இரத்தினபுரி மாவட்ட தோட்டத் தொழிலாளர்கள் சார்பாக கௌரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களை நீர் வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சில் நேரடியாக சந்தித்து நன்றிகளை தெரிவித்ததாக, ரூபன் பெருமாள் அவர்கள் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments: