News Just In

8/09/2024 08:40:00 PM

தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் தமிழ் மக்களை குழிதோண்டிப் புதைக்கும் செயற்பாடு இரா. சாணக்கியன்


தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் தமிழ் மக்களை குழிதோண்டிப் புதைக்கும் செயற்பாடு என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்  தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) இன்று (09.08.2024) ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“தமிழ் பொது வேட்பாளருக்கு தமிழ் மக்களுடைய ஆதரவு எப்போதும் கிடைக்காது. இது ஒரு தேவையில்லாத விடயம் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

அத்துடன், ஒரு சிலர் தங்களுடைய தனிப்பட்ட இலாபத்திற்காக இந்த விடயத்தை முன்னெடுத்து வருகின்றார்கள் என தெட்டத்தெளிவாக தெரிகின்றது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments: