(அஸ்ஹர் இப்றாஹிம்)
போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி கடைகளில் பொருட்களைக் கொள்வனவு செய்த தாய், மகள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த தாயும் 16 வயதுடைய மகளும், வாடகை காரொன்றின் 43 வயதுடைய சாரதியுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மூவரும், புளத்சிங்கள , கல்வெல்லாவ பிரதேசத்தில் உள்ள கடையொன்றில் 5,000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றைக் கொடுத்து பொருட்களைக் கொள்வனவு செய்து மீதமுள்ள பணத்தையும் பெற்று வாடகை காரில் அகலவத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் போது பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து போலி நாணயத்தாளை பயன்படுத்தி கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களும் விற்பனை சீட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், அகலவத்தை, மத்துகம மற்றும் புளத்சிங்கள ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாகப் போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி கடைகளில் பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அகலவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: