News Just In

8/11/2024 05:47:00 PM

கிழக்கு மாகாண ஆளுநர் அக்கரைப்பற்றிற்கு விஜயம்!




அம்பாறை அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாண ஆளுநருடனான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் நடைபெற்றது.அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற தலைவர் த.கயிலாயபிள்ளை தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

பொது அமைப்புக்கள் மற்றும் பாடசாலை நிர்வாகங்கள், ஆலய பிரதிநிதிகள் உள்ளி;ட்ட சமூக மட்ட அமைப்புக்களும் கலந்துரையாடலில் பங்கேற்றன.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தினரால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: