News Just In

8/11/2024 01:47:00 PM

கிளிநொச்சி, அக்கராயன் விநாயகர் சம்பியன் கிண்ணம் உருத்திரபுரம் விளையாட்டுக்கழக வசமானது!


(அஸ்ஹர் இப்றாஹிம்.)
கிளிநொச்சி கால்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் அக்கராயன் விநாயகர் விளையாட்டுக்கழகம் நடாத்திய அணிக்கு 7 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் கனகபுரம் விளையாட்டுக்கழகத்தை 4 : 0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து உருத்திபுரம் விளையாட்டுக்கழகம் சம்பியனானது.

உருத்திபுரம் விளையாட்டுக்கழகம்சந்திரோதையா விளையாட்டுக் கழகத்தை 2:0 என்ற கோல் கணக்கிலும் பரந்தன் மத்தி விளையாட்டு கழகத்தை 3:0 என்ற கோல் கணக்கிலும் அரையிறுதிப் போட்டியில் இளைஞர் வட்டம் விளையாட்டுக்கழகத்தை 11:02 என்ற கோல் கணக்கிலும் இறுதிப் போட்டியில் கனகபுரம் விளையாட்டுக்கழகத்தை 4:0 என்ற கோல் கணக்கிலும் வெற்றிகொண்டு சம்பியன் கிண்ணத்தினை தனதாக்கிக் கொண்டது.

இச் சுற்றுப் போட்டியின் ஆட்டநாயகனாக உருத்திபுரம் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த தனுசும், சிறந்த கோல் காப்பாளராக உருத்திபுரம் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜும் தெரிவு செய்யப்பட்டனர்.

No comments: