News Just In

8/20/2024 03:43:00 PM

கட்சிக் கட்டுப்பாட்டையும் மீறி ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிக்க துணிந்தது அவருக்கு நாட்டு மக்கள் சார்பில் நன்றி செலுத்துவதற்காகும்!

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மெளலானா


(அஸ்ஹர் இப்றாஹிம்)
எமது நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக வரக்கூடிய தகுதியும் தராதரமும் ஜனாதிபதி வேட்பாளர்களுள் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கே மட்டுமே உள்ளது.அதனால் தான் கட்சிக் கட்டுப்பாட்டையும் மீறி ரணில் விக்ரமசிங்க அவர்களை ஆதரிக்க துணிந்தேன்.

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மெளலானா தனது நிலைப்பாடு பற்றி மக்களுக்கு ஆற்றி உரையில் தெரிவித்துள்ளார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த ஜனாதிபதி தேர்தல் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகின்ற ஒன்றாகும்.இந்த தேர்தலில் கட்சிக் கொள்கைகளெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் ,அடுத்த பொதுத் தேர்தலில் நான் பாராளுமன்ற உறுப்பினராக வருவேனோ இல்லையோ அதனை பின்னர் பார்ப்போம்.

சின்னா பின்னமாக மாறி சீரழிந்த எமது நாட்டை மீட்டு இன மத மொழி பேதமின்றி நாட்டு மக்கள் அனைவருமே சுதந்திரமாக தமது மார்க்க கடமைகளை நிறைவேற்றக் கூடிய நிலமைக்கு இந்ந நாட்டை கொண்டு வந்த பெருமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களையே சாரும்.

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொவிட் 19 தொற்று காரணமாக உம்ரா மற்றும் ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதில் முஸ்லிம் மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர் ஆனால் அந்த நிலமை இன்று மாறியிருக்கிறது.

அப்படியான சுமூகமான நிலையை ஏற்படுத்திய ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு நன்றி செலுத்த மக்களுக்கு கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பமான ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பாராளுமன்ற பெரும்பான்மை உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டு மிக குறுகிய காலத்தில் வீழ்ந்திருந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு மீண்டும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக தொடர மக்கள் ஆணையை பெறுவதற்காகவே இந்த தேந்தலில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.எனவே அவரை நன்றியுள்ள அனைவரும் ஆதரிக்க வேண்டும்.என்று தெரிவித்துள்ளார்.

No comments: