News Just In

7/10/2024 08:06:00 PM

மட்டக்களப்பில் விபத்துக்கள் மற்றும் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த விசேட முயற்சி!







மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாநோய்களை தடுத்தல் மற்றும் விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்குமான மாவட்ட பல்துறை வழிகாட்டல் குழுக் கலந்துரையாடல்
மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இன்று நடைபெற்றது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் முரளிஸ்வரன் மற்றும் வைத்தியர் இ.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விபத்துகளை தடுக்கும் தேசிய விழிப்புணர்வு வாரம் யூலை முதலாம் திகதி முதல் யூலை ஐந்தாம் திகதிவரை பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில், நடைமுறைப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தை நிறுவுதல் தொடர்பாகவும் பேசப்பட்டது.
யானை மனித மோதலால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.
பிரதேச செயலாளர்கள், துறைசார் நிபுணர்கள், வைத்தியர்கள், திணைக்கள தலைவர்கள், தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர்கள் என பல தரப்பினரும் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

No comments: