News Just In

7/10/2024 01:41:00 PM

ஒலுவில் அல்-ஹம்றா வித்தியாலயம் 30 போட்டிகளில் மாகாண மட்டத்திற்கு தெரிவு.!



(எஸ்.அஷ்ரப்கான்)

அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் மூன்று நாட்களாக நடைபெற்ற அக்கரைப்பற்று வலய பாடசாலைகளுக்கு இடையிலான 2024 ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில், ஒலுவில்
அக்/அல் - ஹம்றா மகா வித்தியாலயம்மொத்தமாக 31 இடங்களை பெற்றுக் கொண்டது.

இங்கு ஆண்கள் பிரிவில் 21 போட்டிகளும்பெண்கள் பிரிவில் 09 போட்டிகளும் இடம் பெற்றது.இதில் 18-முதலாம் இடங்களையும்,12- இரண்டாம் இடங்களையும்01-மூன்றாம் இடத்தையும் இம்மாணவர்கள் பெற்றுக் கொண்டனர்.

வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும்இம்மாணவர்களை வழி நடாத்திய அதிபர்
அஷ்-ஷெய்க் யு.கே.அப்துர் ரஹீம், இணைப்பாட விதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் ஜே.வஹாப்தீன் மற்றும் பிரதி; உதவி அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகளுக்கும் விளையாட்டுப் பொறுப்பாசிரியர்களான ஆர்.நெளஸாத், ஏ.எம்.எம்.கியாஸ் மற்றும்விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஏ.அஸ்மத் ஸஹி ஆகியோருக்கும் பாடசாலை சமூகம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

No comments: