News Just In

6/18/2024 09:13:00 AM

விமான பயணிக்கு உணவில் காத்திருந்த அதிர்ச்சி: மன்னிப்புக் கோரிய ஏர் இந்தியா நிறுவனம்!



கடந்த வாரம் ஏர் இந்தியா பெங்களூர்(Bengaluru) - சான் பிரான்சிஸ்கோ(San Francisco) விமானத்தில் பயணித்த ஒருவரின் உணவில் உலோகத் தகடு(blead) ஒன்று காணப்பட்டுள்ளது, அதற்காக ஏர் இந்தியா(Air India) விமான நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

இந்த சம்பவம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான AI 175 விமானத்தில் இடம்பெற்றுள்ளது.

பெங்களூரில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நோக்கி சென்ற விமானத்தில் குறித்த பயணி பயணித்துள்ளார்.

பயணத்தின் இடையே பயணிக்கு ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சார்பில் உணவு வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, வழங்கப்பட்ட உணவில் உலோகத் தகடு ஒன்று இருப்பதை அவர் கண்டறிந்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம்,
"உணவில் உலோகத் தகடு இருப்பதை பயணி கண்டுபிடித்தது துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்பதுடன் உணவு விநியோகம் செய்யும் நிறுவனம் இயந்திர கத்திகளை கொண்டு காய்கறிகளை வெட்டும் போது அதில் ஒரு பகுதி உடைந்து விழுந்து இருக்கலாம்” என விளக்கம் அளித்துள்ளது

No comments: