நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்விவலய கமு/கமு/ இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கா.பொ.த (சா/த) மாணவர் தின நிகழ்வு பகுதி தலைவர் இசட்.எம்.நூறுல் அமீன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக பாடசாலையின் அதிபர் ஏ.ஜி.எம்.றிசாத் அவர்களும் கௌரவ அதிதிகளாக பாடசாலையின் பிரதி அதிபர் எம்.எச்.எம்.ஜிப்ரி அவர்களும் எம்.ரீ.எம்.முனாப் மௌலவி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் பாடசாலையின் பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இவ்விழாவில் கா.பொ.த (சா/த) மாணவர் தின நிகழ்வை முன்னிட்டு கலை, கலாசார நிகழ்வுகள் மற்றும் "நயனம்" என்றும் நூல் வெளியிடப்பட்டதுடன் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகளும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது .
No comments: