
மதுபோதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிகளுக்கு பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் அறிவுறுத்தலின் பேரில் இது இடம்பெற்றவுள்ளது
இதன்படி, மதுபோதையில் வாகனம் செலுத்தும் ஒருவரை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஐயாயிரம் ரூபா வழங்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
இதேவேளை, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டறிவதற்காக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் இரத்த பரிசோதனை கருவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments: