News Just In

4/01/2024 07:31:00 PM

காணிகளை மீள ஒப்படைக்க ஜனாதிபதி ரணில் காட்டி வரும் அக்கறையை நாம் பாராட்டு கி ன்றோம் சமூக ஜன நாயக கட்சியின் செயலாளர் மட்டக்களப்பு நகரில்கருத்து!



(மட்டக்களப்பு மொகமட் தஸ்ரிப்)
பத்மநாபா மக்கள் முன்னணியின் தமிழர் சமூக ஜன நாயக கட்சி யின் மட்டக்களப்பு பிராந்திய மாநாடு இன்று மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் மத்திய குழு உறுப்பினருமான கே பத்மநாதன் (மதன் )தலைமையில் நடை பெற்ற இந்த மகாநாட்டில் இக்கட்சியின் செயலாளர் நாயகம் மோகன் சிவராஜா மாவட்ட அமைப்பாளர் எஸ்.சிறில் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கட்சியின் செயலாளர் நாயகம் மோகன் சிவராஜா கருத்து வெளியிடு கையில்;- படையினரால் கையகப் படுத்தப்பட் டி ருந்த காணிகளை மீள ஒப்படைக்கும் விடயத் தில் ஜனாதிபதி ரணில் விக்கிர வசிக்க காட்டி வரும் அக்கறையை நாம் பாராட்டு கி ன்றோம் சுமார் 40 வருட காலம் இழந்த சொந்த காணி களை மீள கையளிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்திருப் பதை அந்த மக்களே பாராட்டு கின்றார்கள்.

இந்த வகை யில் அந்த மக்கள் மீளவும் அந்த இடத்தில் குடியேற வும் அவர்களுக்குரிய தொழில் முயற்சி கள் ஆரம்பிப்பதற்கு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கும் இந்த ஜனாதிபதி கூடுமான நடவடிக்கை களையும் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எமது வேண்டுகோள் ஆகும் என தெரிவித் தார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்து பல தமிழ் கட்சி களால் முன்வைக்கப் படுகின்றது இந்த முடிவானது ஒருபோதும் தமிழ் மக்களின் நலனில் எது வித தாக்கத் தையும் செலுத்தப் போவதில்லை ஏனெனில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்களின் ஆதரவின் றி யே இந்த நாட்டில் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் தமிழ் மக்களின் பிரச்சினை களை ஓரளவு தீர்த்து வைக்கக்கூடிய அல்லது அக்கறை உள்ள கட்சிகளுடன்இணைந்து செயல் படுவ தன் மூலமே நாம் தமிழ் மக்களுக்கு நல்லதை செய்ய முடியும் எனவும் செயலாளர் சிவ ராஜா இ ங்கு கருத்து வெளியிட்டார்

இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்களுக்குள்ள அனைத்து உரிமைகளையும் கொண்டதாக சுய மரியா தை யுடன் இந்த நாட்டில் வாழ்வதற்கு சகல இனங்களுட னும் சமமாக வாழ்வதற்கு வழி செய்யப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

இதனை நாட்டின் நிலைப்படுத்து வதற்கு எமது கட்சி தொடர்ச்சி யாக பாடு படும் இவ்வாறு பத்மநாபா மக்கள் முன்னணியின் தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் மோகன் சிவராஜா இக்கட்சியின் மகாநாடு மட்டக்களப்பு நகரில் இன்று நடைபெற்றது இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இவ்வாறு தெரிவித்தார்

செயலாளர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில் எமது கட்சி இன்னும் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டு மென்று இன்னும் தீர்மானிக்கவில்லை விரைவில் நடைபெற உள்ள இந்த கட்சியின் தேசிய மாநாட்டில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு இது அறிவிக்கப்படும் என தெரிவித்தார்

இந்த நாட்டில் ஊழல் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் குடும்ப ஆட்சி வேண்டாம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் எனக் கொண்டே நியாயமான கோரிக் கைகளை முன் வைத்து தான் இந்த நாட்டில் போராட் டங்கள் நடத்தப்பட்டு போராட்டத்தின் விளைவாக அன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகினார். ஜனாதிபதியாக இருந்த கோட்டாபாய ராஜபக்சவும் வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது .ஜனாதிபதியாக ரணி ல் விக்ரமசிங்க பதவியேற்ற பின் பின்னர் இந்த நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பிரச்சி னை கள் ஓரளவு தீர்க்கப்பட்டு விட்டாலும் இந்த நாட்டின் பொரு ளா தார நெருக்கடி இன்னும் முற்றுமுழுதாக தீர் ந்த பாடு இல்லை என்று தான் நாம் கருத வேண்டியு ள்ளது

No comments: