News Just In

4/16/2024 01:49:00 PM

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவு தொடர்பில் குற்றச்சாட்டு!





கொழும்பு தேசிய வைத்தியசாலையில் (National Hospital of Sri Lanka) நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவு தரம் குறைந்தது என பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான (Dr. Rukshan Bellana) அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கணிசமான அளவு உலர் உணவுகள் தரம் குறைந்ததாகவும் சரியான தரமற்றதாகவும் இருக்கின்றன.

நோயாளிகளுக்கு மட்டுமின்றி ஊழியர்களுக்கும் வழங்கப்படும் உணவு தரமற்றது. அத்துடன் வழங்கப்படும் மீன் பரா மீனாக இருக்க வேண்டும் என்றாலும், சம்பந்தப்பட்ட நிறுவனம் அந்த வகைக்கு ஒத்தான மீன்களையே மருத்துவமனைக்கு வழங்குகிறது.

இந்த உணவை வழங்கும் ஒப்பந்த நிறுவனமே சிறைச்சாலைகள், இராணுவ முகாம்கள் போன்ற அரச நிறுவனங்களுக்கும் உலர் உணவுகளை வழங்குகின்றது.

இது தொடர்பில் உரிய திணைக்களங்களுக்கு பல தடவைகள் அறிவித்த போதும் எவ்வித பலனும் இல்லை.

குறித்த நிறுவனத்திற்கு உலர் உணவுக்காக மாதாந்தம் 76 மில்லியனும், மீனுக்காக 15 மில்லியனும் வழங்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

No comments: