News Just In

3/14/2024 09:02:00 PM

இந்தியாவிடம் இருந்து 90 தொன் பெரிய வெங்காயத்தை இலங்கை அரசாங்கம் கோருகிறது!




இந்தியாவிடம் இருந்து 90 மெற்றிக் தொன் வெங்காயத்தை அரசாங்கம் நேற்றைய முன்தினம்  (12ஆம் திகதி) கோரியுள்ள நிலையில், அங்கிருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்தால் 150 ரூபா மொத்த விலைக்கு வழங்க முடியும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கான பெரிய வெங்காயம் ஏற்றுமதியை இந்தியா கடந்த ஆண்டு (2023) டிசம்பரில் நிறுத்தியது அத்துடன் இலங்கைக்கான பெரிய வெங்காயம் ஏற்றுமதியை பாகிஸ்தானும் நிறுத்தியுள்ளது. இந்த நிலை காரணமாக இலங்கையில் பெரிய வெங்காய தட்டுப்பாடு உருவாகி விலை வேகமாக உயர்ந்துள்ளது.

இப்பிரச்சினைக்கு தீர்வாக, ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ள போதிலும், இந்நாட்டின் பெரிய வெங்காயத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, 90 மெட்ரிக் தொன் பெரிய வெங்காயம் இருப்புத் தொகையை வழங்குமாறு, இந்திய அரசு மற்றும் அந்நாட்டு வர்த்தக அமைச்சகத்திடம், அரசு கோரிக்கை விடுத்துள்ளது. எவ்வாறாயினும், நேற்று (13ஆம் திகதி) மாலை வரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நாட்டில் வெங்காயத்தின் மாதாந்தத் தேவை 25 முதல் 30 மெற்றிக் தொன்கள் ஆகும் . வெங்காயத்தின் ஆண்டுத் தேவை மூன்று இலட்சம் மெட்ரிக் தொன்கள் . ஆனால் கடந்த வருடம் (2023) இலங்கையில் பெரிய வெங்காய உற்பத்தி 7,851 மெற்றிக் தொன் மட்டுமே.

இந்நிலையில், நாட்டின் மூன்று மாத வெங்காய தேவையை பூர்த்தி செய்ய 90 மெட்ரிக் தொன் வெங்காயம் வழங்குமாறும், முதற்கட்டமாக 30 மெட்ரிக் டன் வழங்குமாறும் இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்தியா அதற்கு இணங்கும் பட்சத்தில், சுதந்திர வர்த்தக உரிமத்தின் கீழ் இலங்கைக்கு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய வாய்ப்பு ஏற்படும். இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு வரி உட்பட சுமார் 140 ரூபா செலவாகும் எனவும், அதற்கமைவாக ஒரு கிலோவை 150 ரூபா மொத்த விலையில் வழங்க முடியும் எனவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: