News Just In

12/14/2023 05:36:00 PM

I Road செயற்திட்டங்கள்!




கிழக்கு மாகாணத்தில் வேலைகளை ஆரம்பித்து, பாதியில் நிறுத்தப்பட்டுள்ள கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களை பூர்த்தி செய்யுங்கள். கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் ஒருங்கிணைந்த (I Road செயற்திட்டங்கள்) வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களையும் உடனடியாக முடிக்க வேண்டும் என கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் (I Road செயற்திட்டங்கள்) தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் அந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (14) செத்சிறிபாய, கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சகத்தில் இடம்பெற்ற போது இதனை கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து துரிதமாக பணிகளை முடிக்குமாறு ஒன்றிணைந்த (I Road செயற்திட்டங்கள்) வீதி அபிவிருத்தித் திட்டத்தின் திட்டப் பணிப்பாளருக்கு இராஜாங்க அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

மேலும் பணிகள் நிறைவடைந்துள்ள வீதிகளில் வீதி அடையாளங்கள், பெயர் பலகைகளை நிறுவுதல், வீதிகளில் வெள்ளைக் கோடுகள் மற்றும் பாதசாரிகள் கடக்கும் அடையாளங்கள் போன்ற பணிகளை துரிதமாக முடிக்க செயற் திட்ட பொறியியலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களான டி.வீரசிங்க, கபில அதுகோரல, கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் பி.ரணவீர, ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் திட்டப்பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு இந்த முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்

No comments: