News Just In

12/18/2023 12:20:00 PM

ராஜபக்சக்களின் அழிவை கணித்த பிரபல ஜோதிடர்!




ராஜபக்ச குடும்பத்தின் சகோதரர் ஒருவர் முழு ராஜபக்ச தலைமுறையையும் அழித்துவிடுவார் என பிரபல ஜோதிடர் ஒருவர் குறிப்பிட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் வாஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

2001 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இந்தியாவுக்குச் சென்று அந்த ஜோதிடரை சந்தித்த போது அவர் இதனை தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், இதன்போது கோட்டாபய ராஜபக்ச பற்றி அவர் தீர்க்கதரிசனம் கூறவில்லை எனவும், பசில் ராஜபக்ச பற்றியே அவர் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த மகிந்த ராஜபக்சவின் அரசாங்கமும், 2019 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கமும் பசில் ராஜபக்சவினால் அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இரண்டு ராஜபக்சக்களின் அரசாங்கங்களை அழித்த பசில் ராஜபக்ச, எஞ்சிய அரசாங்கங்களையும் அழிக்க முயற்சிக்கின்றார் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments: