News Just In

12/16/2023 11:54:00 AM

கடைத் தொகுதியை உடைத்துக்கொண்டு உட்சென்ற புத்தளம் தடயவியல் பொலிஸ் ஜீப்!





புத்தளம் தடயவியல் பொலிஸ் பிரிவுக்குரிய ஜீப் வாகனம், புத்தளம் கூட்டுறவு சங்க கடைத் தொகுதியை உடைத்துக்கொண்டு சென்று விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று (15) மாலை இடம்பெற்றுள்ளது.

புத்தளம் குட்சைட் வீதியிலிருந்து வருகை தந்த ஜீப் வாகனத்தை புத்தளம் - கொழும்பு பிரதான வீதியிலுள்ள எரிபொருள் நிலையத்துக்கு அருகில் திருப்ப முற்பட்டபோது, வாகனம் அதன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கூட்டுறவு சங்க கடைத் தொகுதியை உடைத்துக்கொண்டு சென்றுள்ளது.

எனினும், இந்த விபத்தில் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், கூட்டுறவு சங்க கடைத் தொகுதி கட்டடம் உடைந்து சேதமாகியுள்ளதுடன், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அரிசி மூடைகள் மற்றும் பல பொருட்கள் பயன்படுத்த முடியாதவாறு நாசமாகியுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.


No comments: