
எதிர்வரும் ஆண்டு முதல் தற்போதுள்ள கல்வி முறையில் பல முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை தற்போதைய நிலைமையை விட இலகுவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் 2022ல் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் மதிப்பீடு செய்யும் நிகழ்வில் கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
மாணவர்களின் எழுத்தறிவு மற்றும் எண்ணியல் திறன்களை அளவிடுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.மேலதிக விபரங்களை இங்கு வழங்கிய அமைச்சர், எதிர்காலத்தில் பரீட்சையில் 100 வீத சித்திகளைப் பெற்று மாணவர்கள் மதிப்பீடு செய்யப்படமாட்டார்கள்.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 30 வீத புள்ளிகளைப் பெறுவதோடு 4ம் மற்றும் 5ம் தரங்களில் வகுப்பறையில் நடத்தப்பட்ட மதிப்பீட்டில் பெறப்பட்ட மதிப்பெண்களில் 30 வீதமான மதிப்பெண்களை மாணவர்கள் பெற வேண்டும். இதற்காக தொடர்ச்சியான வருகைப் பதிவை மாணவர்கள் பெற வேண்டும்.
No comments: