அரிசி வியாபாரிகள் ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை 30 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இலங்கையின் பிரதான அரிசி விற்பனை நிறுவனம் 230 ரூபாவாக இருந்த சம்பா அரிசியின் விலையை 260 ரூபாவாக உயர்த்தியுள்ளதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை மற்றுமொரு அரிசி விற்பனை நிறுவனம் 245 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்
இவ் விலை உயர்வால் பண்டிகைக் காலம் முடிவடைவதற்குள் சம்பா அரிசியின் விலை கிலோ 300 ரூபா வரை உயரும் வாய்ப்பு உள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.
No comments: