News Just In

12/16/2023 08:01:00 AM

பதுளையில் மண்மேடொன்று சரிந்து கடைக்குள் புகுந்த பாரிய கற்கள்: அதிஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்கள்!

பதுளை - ஹாலிஎல நகரில் நேற்றையதினம் (15-12-2023) பிற்பகல் மண்சரிவு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

ஹாலிஎல நகரின் மத்தியில் அமைந்துள்ள மண்மேடு ஒன்றே இவ்வாறு சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்மேடு சரிந்து விழுந்ததில், அருகில் இருந்த இரு சிறிய கடைகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில், கடையில் இருந்த இரண்டு வியாபாரிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

இதேவேளை, வீதிக்கு இரண்டு பெரிய கற்கள் வந்துள்ள நிலையில், அச்சந்தர்ப்பத்தில் நடைபாதையில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

அனர்த்தத்திற்கு பின்னர் மண்சரிவு அபாயத்தில் இருந்த மேலும் ஐந்து கடைகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹாலிஎல பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் வீதியில் பாதுகாப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

No comments: