News Just In

12/17/2023 11:57:00 AM

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஈகோ ஹீரோ சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு.





நூருல் ஹுதா உமர்
2023 சிறுவர் தினத்தை முன்னிட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுக்குழு அலுவலகத்தால் நடாத்தப்பட்ட போட்டியில் பங்குபற்றி, நாடளாவிய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பேச்சுகளில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டமைக்கான சான்றிதழ் எஸ்.எம். திஹ்யா என்ற சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய தரம் 3 மாணவனுக்கு வழங்கப்பட்டது.

சக்தியைப் பாதுகாக்க, கழிவுகளைக் குறைக்க மற்றும் சூழலுக்கு இசைவான இல்லச் செயற்பாடுகளுக்கு பிள்ளைகளின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளை மையமாக வைத்து நடாத்தப்பட்ட 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கானபசுமை நிகழ்நிலை (மொபைல்) போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு டிசம்பர் 16 கொழும்பில் உள்ள ஹட்ச் ஒர்க்ஸ் நிலையத்தில் நடைபெற்றபோது யூரோப்பியன் யூனியன் டெலீகஷன் டு ஸ்ரீலங்கா அண்ட் மொலட்டிவ்ஸ் ஹெட் ஒப் கோபரேஷன் கலாநிதி ஜான் எச் ஹேசெ அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

"ஒவ்வொரு செயலும் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான பூமியை நோக்கி எனும் உலகத்தை தொடர்ந்து வளர்ப்போம்" என்பதன் ஊடாக உலகை பசுமையான இடமாக மாற்றுவதற்கான பிள்ளைகளின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் பொருட்டு பரிசளிப்பு மற்றும் பசுமைசார் செயற்பாடுகள் இதன்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.இவர் சாய்ந்தமருது இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் இளம் செயற்பாட்டாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments: