News Just In

12/11/2023 02:21:00 PM

சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலயத்திற்கு ஒரு இலட்சம் பெறுமதியான கணினி மேசைளும் ஒரு தொகுதி பிளாஸ்டிக் கதிரைகளும் அன்பளிப்பு




நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலய கமு/கமு/ சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள் தற்போது பாடசாலைக்கு மிகவும் அவசிய தேவையாக இருந்த பாடசாலை தளபாடங்கள் தொடர்பான‌ கோரிக்கை ஒன்றினை‌ பொறியியலாளர் உதுமான் கண்டு நாபீர் அவர்களிடம் முன்வைத்தனர்.

பாடசாலையினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலயத்ததிற்கு மிகவும் அவசிய தேவையாக இருந்த ஒரு தொகுதி தளபாடங்களை பொறியியலாளர் உதுமான் கண்டு நாபீர் அவர்களின்‌ சொந்த நிதியின் மூலம்‌ வழங்கிவைக்கும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரபல சமூக சேவையாளரும், தொழிலதிபரும், நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகரும், பொறியியலாளருமான கலாநிதி உதுமான்கண்டு நாபீர் கலந்து சிறப்பித்ததோடு தளபாடங்களையும் வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த அடைவு மட்டங்களை காட்டிய மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும், சான்றிதழ்களும் பிரதம அதிதியினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


No comments: